திருவள்ளூர்: சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குலவையிட்டு, கும்மியடித்தும், சடலம் கிடத்தி ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி