பெண்ணை மிரட்டிய விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை திருவாலங்காடு போலீசார் கைது செய்ய வந்ததால் ஆண்டர்சன் பேட்டையில் அக்கட்சியினர் மறியல். பூவிருந்தவல்லி திருவள்ளூர் நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாற்றுப்பாதையில் திருநின்றவூர் வழியாக போக்குவரத்தை மாற்றி அனுப்பும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை கைது செய்ய வந்த காவல்துறையினர் அவரது வீட்டில் பின்புறமாக ஏறி குதித்து வீட்டில் இருந்த கண்ணாடி உடைத்ததால் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்சியின் தலைவரை இப்படித்தான் நடத்துவதா என்று கொந்தளித்தனர்.