மின் வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அருகே ஜல்லிமேடு மற்றும் கன்னியம்மன் கோயில் தெரு பகுதிகளில் இரண்டு நாட்களாக நீடித்து வரும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடை வெயிலில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை-திருப்பதி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி