திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை சிட்கோவில் அமைந்த காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் பத்து நாட்களுக்கு மேலாக லாரி சக்கரத்தில் சிக்கி இறந்து அழுகி துர்நாற்றம் வீசி வரும் நாய்க்குட்டி உடல் பரப்பும் விதத்தில் அங்கேயே போடப்பட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் டிரான்ஸ்போர்ட் மேனேஜராக பணியாற்றும் சங்கரிடம் அருகில் இருந்த தொழிலாளிகள் பலமுறை கூறியும் அதனை அகற்றுவதற்கு மேனேஜர் சங்கர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இறந்து போன நாய் குட்டியை அங்கிருந்து அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதால் துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் விதத்தில் உள்ளது.
டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மண்டல டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகத்திற்கு அருகில் உயிரிழந்து போன நாய்க்குட்டியை அப்புறப்படுத்த கூட மனமில்லாமல் அப்படியே போட்டு வைத்துள்ள பரிதாபகரமான காட்சி காண்பவர் கண்களை கலங்கச் செய்தது. டாஸ்மாக் மண்டல மேலாளராக உள்ள மகேஸ்வரி இது குறித்து டிரான்ஸ்போர்ட் மேனேஜராக உள்ள சங்கரிடம் இறந்த நாய் குட்டியை அப்புறப்படுத்த கூறியும் அலட்சியம் காட்டியுள்ளார்.