பூவிருந்தவல்லி: 24 மணி நேரமாக மின்சாரம் இல்லை.. பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை பூவிருந்தவல்லி அடுத்த சென்னைக்குப்பம் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 
சென்னை குப்பம் பிரதான பகுதியில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் மின்கம்பம் இடிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் மின்கம்பம் சரி செய்யப்படாததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு கடந்த 24 மணி நேரம் இல்லாத காரணத்தினால் தற்போது அப்பகுதி வாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் அறிந்து தற்போது காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி