அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் பழைய டோல்கேட் பகுதியில் உள்ள இப்தார் மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை நடத்தினர். இதை அடுத்து ஒருவரை ஒருவர் ஆறாடி கட்டித் தழுவிக் கொண்டு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் கட்டித் தழுவி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல் சிறுவர்களும் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துக்கள் கூறியது அனைவரிடத்திலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இதேபோல் அனைத்து மதத்தினரும் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனும் அனைத்து மக்களும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வேண்டும் என பிரார்த்திக்கப்பட்டது.