இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கை வேகப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தனது கணவருக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி சந்தியாவை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் 1) சந்தியா, 2) யோகேஸ்வரன், 3) சதீஷ் 4) ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் ராணுவ வீரர் கொலை வழக்கில் சிறையில் உள்ள 1) ஸ்ரீராம், 2) சதீஷ், 3) யோகேஸ்வரன் ஆகிய மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப். இந்த உத்தரவை திருவாலங்காடு போலீசார் புழல் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.