மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் இன்று திருவள்ளுார் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி 10 -ஆவது வார்டில் ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சலவைத்துறை (எ) டோபிகான கட்டடத்தினை திறந்து வைத்து 30 சலவை தொழிலாளிகளுக்கு தலா ரூ. 6700 மதிப்பில் ரூ. 201000 மதிப்பிலான LPG சலவைப் பெட்டியினை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப். இ. ஆ. ப. அவர்கள், திருவேற்காடு நகராட்சி தலைவர் என். ஈ. கே. மூர்த்தி, ஆணையர் திரு. என். தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.