பூந்தமல்லி பெங்களூர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள குளிர்பான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குளிர்சாதன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் குடோனில் உள்ள கன்வென்சர் பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு கரும்புகை அதிக அளவு வெளியேறி கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் பூந்தமல்லி மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.