அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதே தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளியான காமேஷ் என்பவர் அந்த வீட்டிற்கு சென்று அப்பெண்ணின் அருகில் போய் படுத்துக்கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் சுதாரித்துக் கொண்ட ரமேஷின் மனைவி கூச்சலிட்டதைக் கேட்டு அவருடைய கணவர் எழுந்து வருவதற்குள் அங்கிருந்து முதியவர் தப்பித்து ஓடிவிட்டார்.
இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் பூபாலன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தனிப்படை போலீசார் வலை வீசி தேடிவந்த நிலையில் மாதவரம் ரவுண்டானா பஸ் நிலையம் அருகே பதுங்கியிருந்த காமேஷ் என்ற முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு, அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
மேலும் போலீசாரின் விசாரணையில் இவர் இதுபோல் பல பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாகவும் இதுகுறித்து பெண்கள் யாரும் புகார் அளிக்க முன் வராததால் போலீஸிடம் சிக்கி கொள்ளாமல் தப்பித்து வந்துள்ளார் என தெரியவந்தது.