மதுரவாயல் புறவழிச் சாலையில் விதிகளை மீறி, ஆபத்தான முறையில் ஆட்டோவை இயக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சர்வீஸ் சாலையில், ஒரு சக்கரத்தை மேலே தூக்கியபடி ஆட்டோவை சாய்த்து ஓட்டிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.