மதுரவாயல் எம்எல்ஏ கோரிக்கை : போரூரில் தலைமை செயலர் ஆய்வு

போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ குடிநீர் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகவும், கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சென்னை மேயர் ப்ரியா மற்றும் அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் இதனை உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை போரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மதுரவாயல் எம். எல். ஏ க. கணபதி கோரிக்கை வைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று சென்னை போரூர் ஏரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். குறிப்பாக போரூர் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் மணப்பாக்கம் பகுதிக்கும் செல்லும் நீரை முறைப்படும் பணிகளையும், மாற்று நீர் தேக்க பணிகளை விரைந்து முடிக்குமாறு அப்போது அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி