திருத்தணி அருகே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தால் ஆத்திரமடைந்த மற்ற பயணிகள், அரசு பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் இளங்கோவனை சம்பவ இடத்திலேயே விரட்டித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.