இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 2) மாலையில் சிறையின் வெளியில் உள்ள சுற்று அருகில் பந்து வடிவிலான ஒரு பொருள் இருந்ததைப் பார்த்த சிறை காவலர் ஒருவர் அதை பிரித்து பார்க்க போது அதில் 18 கிராம் கஞ்சா, இரண்டு லைட்டர்கள், மூன்று பீடி கட்டுகள் இருந்தன. அதிகாரி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையின் வெளியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த போதைப்பொருட்களை வீசி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து போதைப் பொருட்கள் வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது