இந்த சிலையை அகற்றுவதற்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடத்தப்பட்டு, இந்த சிலை அகற்றுவது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியிடம் அனைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து இந்த காந்தி சிலையை இந்த பகுதியிலிருந்து அகற்றுவதற்காக இன்று அதிகாலை திருத்தணி டி.எஸ்.பி கந்தன், திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி, திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருத்தணி நகராட்சி துறை அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மேற்பார்வையில் கிரேன் உதவியுடன் காந்தி சிலை அகற்றப்பட்டது. காந்தி சிலை பத்திரமாக அகற்றப்பட்டு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்