போரூர் எம். எஸ் சாலையில் அமைந்துள்ள மரப் பலகை மற்றும் மரச்சாமான்கள் விற்கும் கடையில், இன்று காலை ஊழியர்கள் பணியில் இருந்தபோது ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் பிளைவுட் பலகைகள், மரக்கட்டைகள் மற்றும் ஒட்டும் பசைகள் இருந்ததால், நொடிப் பொழுதில் தீ கடை முழுவதும் மளமளவென பரவியது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.