ஏரியில் கொட்டப் பட்ட காலாவதியான பால் பாக்கெட்டுகள் பரபரப்பு

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலாவதியான ஐஸ்கிரீம்கள், பால் பாக்கெட்டுகள் டன் கணக்கில் கொட்டப்படுவதால் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. இந்த ஏரி சுற்றுவட்டார மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குவதால், குப்பைகளால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை மற்றும் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி