மாதவரம் பகுதியில் வீடு இடித்து அகற்றம்

மாதவரம், பஜார் அருகே ராஜாஜி தெருவில் 2,000 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட வீடு, மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், வீட்டை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மாநகராட்சியின் மாதவரம் மண்டல பொறியாளர் அனந்தராவ் உள்ளிட்ட அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து அகற்றினர்.

தொடர்புடைய செய்தி