சென்னை: இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். கணவர் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்திருந்த நிலையில், தன்னை அவரது வழக்கறிஞர் என்று கூறி ஒருவர் பெரம்பூர் தனியார் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆபாசமாகப் பேசி அத்துமீற முயன்றபோது, பொதுமக்கள் அவரைத் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி உதவியாளர் ஞானபிரகாஷ் என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி