திருமணத்திற்கு பிறகு ஹரி பிரசாத் குடும்பத்தினர் கயல்விழியிடமிருந்து 15 சவரன் நகையை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, அவர் சமூகத்தின் பெயரைச் சொல்லி தொடர்ந்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒரு கட்டத்தில் கணவர் குடும்பத்தினர் அனைவரும் கயல்விழியை வாடகை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த ஹரி பிரசாத், கயல்விழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளனர். ஆனால், சில நாட்களிலேயே கயல்விழியிடமிருந்து ரூ. 10, 000 பணம் மற்றும் அவரது கல்விச் சான்றிதழை எடுத்துக் கொண்டு ஹரிபிரசாத் தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கயல்விழி, கடந்த மே மாதம் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.