இரு மாநில பொதுப்பணித்துறையினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வந்து நிரம்புகிறது. இதனை அடுத்து பூண்டி அணையில் சேகரமாகியுள்ள தண்ணீரை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்புக்கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடி வீதம் பொதுப்பணித்துறையினர் திறந்து வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை, தேர்வாய், கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் தண்ணீரை தேக்கி வருகின்றனர். கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கைகளை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்