திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொன்னேரி அருகே உள்ள ஆசான்புதூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து என்பவரின் மனைவி ஜெயகாந்தி (41 வயது) என்பவருக்கு மேற்கொள்ளப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் மூளைக்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததில் சுயநினைவின்றி இருந்தவர் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்த சோகம் நடைபெற்றுள்ளது.
உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் தவறான சிகிச்சை செய்ததால் உயிரிழப்பு நேர்ந்தது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை. இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.