எண்ணூர் துறைமுகம், எண்ணெய் நிறுவனத்தில் போர் ஒத்திகை

காஷ்மீர் பகல் காமில் அண்மையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை உடைத்து, வர்த்தகத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மேலும் இந்தியாவும் - பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது 

அதன்படி, தமிழகத்தில் நேற்று சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணு மின் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இன்று எண்ணூர் காமராஜர் துறைமுகம், மணலியில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி