வடகரை: வீட்டுமனை பட்டா வழங்க கோரி.. கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

வடகரை பட்டியல் இன மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வடகரையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 500க்கும் மேற்பட்ட பட்டியல் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அப்பகுதி மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி கம்யூனிஸ்ட் கட்சி உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி