திருவேற்காடு: கள்ளக்காதலியை கொடூர கொலை: காதலன் கைது

அயனம்பாக்கம் ஏரிக்கரையில் பெண் ஒருவர் காயங்களுடன் பிணமாக கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில்,ராதா (50) என்பவர், கூலித்தொழிலாளி சுரேஷ் (35) என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மது அருந்தும்போது, சுரேஷின் மனைவி குறித்து ராதா தவறாக பேசியதால் வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த சுரேஷ், ராதாவின் தலையை ஏரிக்கரை சுற்றுச்சுவரில் மோதி, பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்துள்ளார். தப்பியோடிய சுரேஷை திருவேற்காடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி