திருத்தணி: சரக்கு ஆட்டோவில் மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பம் போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் நடைபெறும் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய விளையாட்டு திடல் இல்லாத இந்த பள்ளியில் சிலம்பம் போட்டி நடத்துவது எதற்காக என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த பள்ளியில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு சுற்றுவட்டாரத்திலிருந்து அரசு பள்ளி மாணவிகள் ஆபத்தான நிலையில் சரக்கு ஆட்டோவில் மாணவிகளை கல்லூரி மாணவர்கள் உதவியுடன் அழைத்து வருகின்றனர். 

சரக்கு ஆட்டோவில் வரும் மாணவிகளுக்கு விபரீதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு? ஏன் அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த மாணவிகளை உடன் அழைத்து வருவதுபோது பாதுகாப்பிற்கு உடன் வருவதில்லை? இதுபோல் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என்று திருத்தணியில் இருந்து பொதுமக்களும் பெற்றோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி