வழக்கறிஞர்கள் அறை, சிறைவாசிகள் காண வருபவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவர்களை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் உயர் நீதிமன்ற உத்தரவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலில் வழக்கறிஞர்கள் அறை, சிறைவாசிகள் காண வருபவர்களுக்கு அறை உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும், உலக தரமிக்க வகையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், செந்தில் பாலாஜிக்கு எந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளும் சிறையில் செய்து தரவில்லை. அவருக்கென தனி உணவும் தரப்படவில்லை. அவர் அதற்கான கோரிக்கையும் வைக்கவில்லை. அனைத்து சிறைக் கைதிகளுக்கும் என்ன நடைமுறைகளோ அதுவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.