அதில் ஒரு பகுதியாக சென்னை செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளியின் உலக நன்மை வேண்டி என்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் வருகின்ற காலங்களில் மழை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காத்திடவும், எதிர்காலத்தில் நோய் நொடிகளில் இருந்து வாழ்வு பெறவும் பக்ரீத் திருநாள் இன்று இந்த சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஆயிஷா பள்ளி தலைமை இமாம் காஜா மொய்னுதீன் ஜமாலி மற்றும் ஆயிஷா பள்ளியின் தலைவர் காஜா மொய்தீன், செயலாளர் அப்துல் லத்தீப், பொருளாளர் முகமது ஆசிக், துணைத் தலைவர் அக்பர் பாஷா, துணைச் செயலாளர் நாகூர் அனிபா உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பொதுமக்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.