திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் சமோசா விற்ற நபர் அடுத்த ரயிலுக்கு மாறி சென்றபோது கையில் வைத்திருந்த சமோசா பக்கெட் தவறி விழுந்ததில் அதிலிருந்து சமோசாக்கள் கீழே இருந்த தண்டவாள கற்குவியல்களோடு விழுந்து சிதறிக் கிடந்தன. அதனை அந்த வியாபாரி அவரது நண்பர் உதவியோடு தேடி எடுத்து மீண்டும் அதே பக்கெட்டில் போட்டு விற்பனைக்கு கொண்டு சென்றார். இதைப் பார்த்த ரயில் பயணிகள் இந்த சமோசாக்களை நாம் வாங்கி சாப்பிடுகிறோம் என்று முகம் சுளித்தபடி பார்த்தனர். இனி சமோசாவை சாப்பிடும் போதெல்லாம் இதுதானே நினைவுக்கு வரும் என்று எண்ணத் தோன்றியது, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.