திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சின்னக்காவனம், பழவேற்காடு, கிருஷ்ணாபுரம், பஞ்சட்டி, ஆலாடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடி கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த சில தினங்களாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி