இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆக்கிரமிப்பாளருக்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டித்தும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சர்ச்சைக்குரிய இடம் தனக்கு சொந்தமானது என சம்பந்தப்பட்ட தனிநபர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்ததாகவும், அதன் அடிப்படையில் வருவாய் அலுவலர்கள் நில அளவீடு செய்ய வந்ததாகவும், அளவீடு தொடர்பான அறிக்கை கோட்டாட்சியர் மூலம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்