திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தனியார் பெயிண்ட் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் உள்ளே இருந்த மூலப்பொருட்கள் பயங்கரமாக எரிந்து ஒரே புகைமூட்டமாக காணப்பட்டது. உடனே அங்கே வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். மேலும் வீரர்களே புகையால் மூச்சு திணறினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.