மாதவரம்: திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை ஆய்வுக் கூட்டம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை ஆய்வுக் கூட்டம் மாதவரம் ராமலட்சுமி பாரடைஸ் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சென்னை மண்டல ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. 

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், சென்னை மேற்கு மாவட்டம் மாவட்டச் செயலாளர் நே. சிற்றரசு, சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர், சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் மயிலை த. வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கார்த்திக் மோகன், சென்னை மண்டல பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான சி.எச். சேகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். தகவல் தொழில்நுட்ப அணி செயலாரும் தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி