இங்கு இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் விற்பனை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு ஆட்டின் எடை 10 கிலோவிற்கு மேலாக இருந்தால் ஒரு ஆடு பன்னிரண்டாயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
கோடை வெயிலின் காரணமாக வியாபாரமும் மந்த நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் விலை சற்று குறைந்த அளவில் விற்கப்பட்ட ஆடுகள் தற்போது விலை ஏற்றமாக உள்ளதால் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்படுகிறது. மேலும் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் ஆடுகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் சுமார் 20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என்று தெரிவித்தனர்.