இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை செங்குன்றம் அடுத்த பம்மதுகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள், திரைத்துறையினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல இயக்குனர் வெற்றிமாறன் விக்ரம் சுகுமாரன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய போது தமக்கு கிடைத்த முதல் நண்பர் விக்ரம் சுகுமாரன் எனவும், ஆடுகளம் திரைப்படம் மதுரையை பிரதிபலித்ததற்கு விக்ரமே முக்கிய காரணம் என வெற்றிமாறன் புகழாரம் சூட்டினார். மதயானைக்கூட்டம் தொடர்ந்து பல திரைப்படங்களை எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என வருத்தம் தெரிவித்தார்.