பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் திமுகவின் 9வது வார்டு கவுன்சிலர் ஜீவா கோவா சங்கர் ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் சுவரை இடிக்க மறுத்துள்ளார். பின்னர் கோவா சங்கருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஜீவா ஜேசிபி இயந்திரம் வைத்து காம்பவுண்ட் சுவரை இடித்து அகற்றியுள்ளார். காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு மீண்டும் ஜீவா கோவா சங்கர் எதிர்ப்பு தெரிவித்ததால் இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் புகார் அடிப்படையில் நேற்றைய தினம் இரவு திமுக கவுன்சிலர் ஜீவாவை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோவா சங்கர், ஜேசிபி ஆபரேட்டர் சீனு ஆகிய இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.