திருவள்ளூர்: கெமிக்கல் குடோன் தீ விபத்து: பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த செந்தம்பாக்கத்தில் பெயிண்ட் மூலப்பொருட்கள் தயாரிக்கும் ஸ்வத்திக் கெமிக்கல் குடோன் இயங்கி வருகிறது. இதனை புரசைவாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன் (வயது 47) என்பவர் நிர்வகித்து வருகின்றார். இங்கு கெமிக்கல் பொருட்கள் இருப்பு வைத்து அதில் ரசாயனம் கலந்து பெயிண்டுகள் மற்றும் கிரீஸ் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 

இந்நிலையில் மாலை 4 மணியளவில் இந்த குடோனில் வெண்புகை ஏற்பட்டு தீப்பிழம்பு பிடித்து திடீரென கெமிக்கலில் தீ பிடித்ததால் மளமளவென்று தீ பரவி குடோன் முழுவதும் எரிந்தது, மாதவரம் செங்குன்றம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த வட மாநில நபர்கள் ஏழு பேருக்கும் மேல் உள்ளவர்கள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகில் எரிவாயு சிலிண்டர்கள் இருக்கும் குடோன் இருந்ததால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கினர். 

இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தீயில் எரிந்து நாசமான பொருட்களின் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி