மணலி மற்றும் திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், தேரடி ப. சதீஷ் மற்றும் மணலி திலக் தலைமையில், நேற்று (மே 31) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் என். செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய உறுப்பினர்களை வரவேற்று அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.