கும்மிடிப்பூண்டி: காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு

மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா (21), ஓராண்டுக்கு முன் காவியா (20) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவியா பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு சென்ற விஷ்வா, பாதிரிவேடு காவல் நிலையம் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி