திருவள்ளூர்: பெண் கொலை வழக்கில் இளைஞர் கைது

ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சரஸ்வதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், புதிய செல்போன் வாங்கிய வெங்கடேசன், அதன் இஎம்ஐ கட்ட முடியாமல், செல்போனை உடைத்து விட்டதாகவும், மீண்டும் செல்போன் வாங்க பணம் இல்லாததால் சரஸ்வதியை கொலை செய்து நகை திருடியதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி