திருமழிசை: கஞ்சா விற்பனை.. வாலிபர் கைது

திருமழிசை அடுத்த வெள்ளவேடு பகுதியில், வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எம்.ஜி.ஆர். நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிக்ரம்குமார் (24) என்பவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பீகாரில் வாங்கி வந்து திருமழிசை மற்றும் சுற்றுப்பகுதியில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், பிக்ரம்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி