திருவள்ளூர்: திருமணமாகி 5 மாதங்களில் பெண் மரணம்

அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) மரணம் குறித்து அவரது கணவர் ராஜேஷ் (30) மீது பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணமான 5 மாதங்களில், ராஜேஷ் கொத்தனார் வேலைக்குச் சென்றபோது, வீட்டில் கௌசல்யா தவறி விழுந்து தலையில் காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் கௌசல்யா உயிரிழந்தார். பெண்ணின் வீட்டார், அவரது தலையிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததால் சந்தேகம் எழுப்பினார். தாய் ரேவதி அளித்த புகாரின் பேரில் கணவர் ராஜேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி