கும்மிடிப்பூண்டி: மகளிர் உரிமைத் தொகை: திமுகவினர் கொண்டாட்டம்

மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களுக்கு தமிழக அரசு இன்று ரூ.5000 அவர்களது வங்கி கணக்கிற்கு செலுத்தியது. இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டியில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ கோவிந்தராஜன் தலைமையில் நகர செயலாளார் அறிவழகன், பேரூராட்சி துணைத் தலைவர் கேசவன் உள்ளிட்டோர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி