உதியன்மர பயன்பாடு மற்றும் அதன் அவசியம்.

உதியன்மரம் (அ) உதிரமரம் (அ)ஒதியமரம். ஒதி பெருத்து உத்திரத்திற்கு ஆகுமா ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் என்பார்கள் சிறு கிளைகளில் நுனியில் குத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலை உதிர் மரம் இலை உதிர் காலங்களில் இலைகளே இல்லாமல் பூ அல்லது காய்கள் மட்டும் நிறைந்து காணப்படும் இலை வேர் பட்டை மருத்துவ குணம் உடையது தாது பலம் கொடுக்கவும் சதை நரம்புகளை சுருங்கச் செய்யவும் ரத்தக்கசிவை நிறுத்தவும் உடல் தாதுக்கள் அழுகுவதை தடுக்கவும் மருந்தாக பயன்படுகிறது இலையை அரைத்து பற்றிட எவ்வித புண்களும் ஆறும் ஒதியம் பட்டையை நீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி நீரில் ஆறாத புண்கள் ஆசன வாயில் காணும் புண்கள் பிறப்புறுப்பில் உள்ள புண்கள் ஆகியவற்றை கழுவி வர குணமாகும் வாய் கொப்பளிக்க வாய் புண் பல் ஈறுகளில் ரத்தம் சீழ் வருதல் குணமாகும் 20 கிராம் பட்டையுடன் ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்து மை போல் அரைத்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை மாலை சாப்பிட மூலக்கடுப்பு ரத்த பேதி நீர் பேதி தாகம் மயக்கம் பெரும்பாடு ஆகியவை தீரும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி