திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26) இவர் பியூட்டிஷியன் ஆக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பிள்ளையார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பவித்ரா (25) என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் கோவிலில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து விருந்துக்காக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள மணமகளின் வீட்டிற்குச் சென்ற நிலையில் இன்று காலை உதயகுமார் தனது நண்பர்களைப் பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மாமியார் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
சித்தூர் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெறும் சாலையில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் உள்ளார். தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தகவல் அளித்துவிட்டு உதயகுமாரை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு உதயகுமார் உறவினர்கள் வந்துவிடவே அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உதயகுமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.