கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில், சேது-சங்கீதா தம்பதியினரின் ஒன்றரை வயது மகள் தர்ஷினி, வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் தேடியபோது, வீட்டின் அருகிலுள்ள மாங்குளம் கால்வாயில் குழந்தை மீட்கப்பட்டார். குழந்தையை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.