இன்று (ஜனவரி 1) புத்தாண்டை முன்னிட்டு பூண்டி அணையின் அழகை பார்ப்பதற்கும், கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றும் பகுதியில் உபரி நீர் வெளியேற்றப்படாத நிலையிலும் 35 அடி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி தந்த பூண்டி அணையை ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் வந்து பார்த்து ரசித்தனர்.
மதகுகளில் உபரி நீர் கசிந்து வீணாக வெளியேறும் பகுதிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரை சென்னை செங்குன்றம் ஆவடி அம்பத்தூர் கும்மிடிப்பூண்டி பெரியபாளையம் பொன்னேரி மட்டுமின்றி ஆந்திர மாநிலம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆன்மீக சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பூண்டி அணை முழு கொள்ளளவு எட்டியிருந்ததை சுற்றிப் பார்த்து ரசித்தனர். மேலும் சூரிய அஸ்தமனத்தை பூண்டி அணை லிங்க் கால்வாய் பகுதியில் நின்று வண்ணம் குழந்தைகள் பெண்கள் என ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.