திருவள்ளூர்: நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்.. பரபரப்பு

திருப்பதியில் இருந்து சென்னைக்கு சென்ற சப்தகிரி விரைவு ரயில் திருவள்ளூர் அருகே சென்றபோது யுகேந்திரன் என்ற லோகோ பைலட் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் யுகேந்திரன் சாமர்த்தியமாக திருவள்ளூர் ரயில் நிலையம் வரை அந்த விரைவு ரயிலை ஓட்டிச் சென்று நடைமேடை 3-இல் நிறுத்தியுள்ளார். 

ரயில்வே அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் திடீரென திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணித்த ரயில் பயணிகள் அவதி அடைந்தனர். 

மாற்று ரயில் இல்லாமல் அவதி அடைந்த நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் ஏறி சென்னை சென்றனர். இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர். பின்னர் இரவு 10.15 மணிக்கு மாற்று ரயில் ஓட்டுநர் கலையரசன் ரயில்வே நிர்வாகம் அனுப்பியதன் பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் நிறுத்தப்பட்ட சப்தகிரி விரைவு ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. லோகோ பைலட் திடீரென உடல் நலக்குறைவால் சாமர்த்தியமாக ரயிலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்திய சம்பவத்தால் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி