திருத்தணி: ஒரே நாளில் 10 பேரை கடித்த நாய்.. அதிர்ச்சி சம்பவம்

திருத்தணி ஒன்றியத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், கே.ஜி.கண்டிகையில் நேற்று ஒரே நாளில் 10 பேர் நாய் கடித்து காயமடைந்துள்ளனர். அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி