திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்ட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த கே.சுதர்சனம் கடந்த 2005ம் ஆண்டு, வீட்டில் இருந்தபோது பாவாரியா கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தினரையும் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதில் 4 பேர் மீதான விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் வரும் நவ.21ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.